தமிழர்ப்பகுதியில் தாயிற்கும் மகளுக்கும் நடந்த கொடூர செயல்!

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகளும் வால்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருகோணமலை-கோணேஷபுரி பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவசர சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

நிலாவெளி -கோணேஷபுரி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் எஸ். சந்ரா ரஜினி என்ற 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.                                                    23 6428b4e42a673

இதேவேளை குறித்த பெண்ணின் மகளான ஸ்ரீதரன் சந்திரிகா என்பவர் தாயை வாளால் வெட்ட முற்பட்டபோது தடுக்க சென்றமையினால் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாயின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்துவதற்காக அவசர அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அத்துடன் கைகலப்புடன் தொடர்புடைய பெண்ணொருவர் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த வால்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button