கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வரவழைத்து 20 இளைஞன் அதிரடி கைது!

வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்றைய தினம் (02-04-2023) தெரிவித்துள்ளனர்.

23 64295acf45bb2

இந்த திருட்டு சம்பவம் இலுப்பையடிப் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்தில் வங்கியில் வைப்புச் செய்வதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளரால் கடந்த புதன்கிழமை (29-03-2023) வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

23 64295acf98312

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.கஜேந்திரன் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் திசாநாயக்கா (60945), பொலிஸ் கான்ஸ்டபிள்களான தயாளன் (91792), சியான் (105139) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி கொழும்பு சென்றிருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் சூட்சுமமான முறையில் வவுனியாவிற்கு வரவழைத்து வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

23 64295acfdb9b9

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பணத்தில் 9 இலட்சம் ரூபாய் இளைஞனின் வங்கியில் உள்ளதாகவும், மிகுதி 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button