அதிவேக வீதியில் கோர விபத்து; வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்காக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) பிற்பகல், தெற்கு அதிவேக வீதியின் 8.7 கிலோமீற்றர் வீதியகொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து மாத்தறையிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற லொறியின் பின்பகுதியில் வைத்தியர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட வைத்தியர் பணிக்கு சமூகமளிக்கச் சென்ற வேளையிலேயே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 6428754559ec6
இவ் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த களனிகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு காயமடைந்த வைத்தியருக்கு ஆரம்ப சிகிச்சைகளை வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button