அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனடாவின் நகரின் சென் லோரன்ஸ் நதியில் இவ்வாறு ஒரு சிறு குழந்தை உள்ளிட்ட 6 பேரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது. கியூபெக், ஒன்றாரியோ மற்றும் நியூயோர்க் பகுதிகளின் எல்லைப் பகுதியில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனடாவின் நகரின் சென் லோரன்ஸ் நதியில் இவ்வாறு ஒரு சிறு குழந்தை உள்ளிட்ட 6 பேரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது.
கியூபெக், ஒன்றாரியோ மற்றும் நியூயோர்க் பகுதிகளின் எல்லைப் பகுதியில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் மூலம் மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த நதியில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் காணப்பட்டதாகவும், அந்தப் பகுதியின் அருகாமையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.