யாழில் மீள அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள்!

யாழில் மீள அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள்! யாழ்.மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழில், சோதனைச் சாவடிகள், Jaffna News, yarlnews
யாழில்

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குப்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை சாவடியை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்  என இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button