12 வயது மாணவியை காட்டுக்குள் அழைத்து சென்ற நபர் கைது.!
12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருவரும் இருந்த நிலையில் சந்தேக நபருடன் சிறுமியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு தகவல்
வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் அடிப்படையிலேயே குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை குறித்த நபருடன் இருந்த மாணவி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.