காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்,தண்ணீர்,சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்,நின்று தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நோய்கள்,அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்,அதிக தண்ணீர் குடிப்பதன் அறிகுறிகள்,சுடு தண்ணீர்,தண்ணீர் குடித்தால் எடை குறையுமா,சுடு தண்ணீர் குடித்தால் தொப்பை குறையுமா,சுடு தண்ணீர் குடித்தால் என்ன நன்மை,சுடு தண்ணீர் குடித்தால் உடம்பு குறையுமா,காலையில் தண்ணீர் குடிப்பது,தண்ணீர் குடிப்பது எப்படி,தண்ணீர் குடித்தல்

எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.

drinking water

இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.

பசியைத் தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

இரத்த செல்கள் உற்பத்தியாகும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

தலைவலியை தடுக்கும்
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.

அல்சரைத் தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

எடையை குறைக்க உதவும்
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button