யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததுடன் , இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.