வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டவருக்கு நேர்ந்த கதி!
நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட குற்றச்சாட்டில் 38 வயதான மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தனது பெற்றோருடன் கிரிந்தவுக்கு தங்குமிடம் பெற சென்றுள்ளார்.
யுவதி முறைப்பாடு
தங்குமிடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் அருகில் தான் இருந்தபோது, அந்தப் பாதையால் பயணித்த நபர் ஒருவர் தன்னைக் கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”left” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]அத்துடன் சந்தேக நபரிடம் இருந்த கைத்தொலைபேசியை கைப்பற்றிய யுவதி அதனை கிரிந்த பொலிஸாரிடம் ஒப்படைத்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் விசாரணைகளை மேற்கொண்ட கிரிந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, மாகம பிரதேசத்த்தை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.