துறவிகள் கையில் கொண்டு திரிந்த திருவோடு என்பது என்ன தெரியுமா?

துறவிகள் கையில் கொண்டு திரிந்த திருவோடு என்பது என்ன தெரியுமா? இந்தியப் பெருங்கடலிலுள்ள ”சீசெல்ஸ்” தீவுகளில் வளரும் ஒருவகைப் பனைமரத்திலிருந்தே இது உற்பத்தியாகின்றது. கபாலம், அட்சய பாத்திரம்(மணிமேகலை) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இந்தத் திருவோடு, முனிவர்கள் , துறவிகள் கைகளில் இருப்பது…தமது உணவைப் பிச்சையாக இதை ஏந்தியே பெறுவது, அன்றைய வழமையாக இருந்துள்ளது.

திருவோடு, துறவிகள் திருவோடு in english, திருவோடு buy online, , திருவோடு எங்கு கிடைக்கும்
திருவோடு என்பது என்ன தெரியுமா?

இந்தப் பனைமரத்திலுள்ள ஒரு பெரிய விதைதான் இந்த திருவோடாக செய்யப்படுகின்றது. இதற்கு கடல் தேங்காய் (Coco de mer)என்றும் பெயர் உண்டு.Praslin, Curieuse, Seychelles,தீவுகளில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவம் மிக்க மரமாகும். தாவர உலகில் மிக அதிக எடைகொண்ட விதைகளை இவை கொண்டுள்ளன.

இதனுடைய தோற்றம் பெண்களின் பின்புறத்தைப் போன்றே தோற்றமளிக்கும். இதனுடைய தாவரவியல் பெயர்”Lodoicea callipyge”. அழகான பின்புறங்கள்”callipyge” என்ற கிரேக்க சொல் குறிக்கின்றது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”left” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இத் தீவுகளைக் கண்டறிய முன்பு இவை கடலில் வீந்து அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, பின்பு கரையொதுங்கிக் கிடந்தைதை கண்டுள்ளார்கள்…இந்த விதைகளை Maldive coconut என்றே ஆரம்பத்தில் பெயரிட்டு அழைத்துள்ளார்கள்.

இது எடைகூடிய காய் என்பதால், தண்ணீருள் விழுந்தால் மிதப்பதில்லை. நீருள் அமிழ்ந்து அடிக்குப் போய்விடுகின்றன. சில நாட்கள் கழித்து, எடை குறையும் போது, நீர்மட்டத்திற்கு வந்து மிதக்கின்றன… இதைப் பார்த்ததும், நீருக்கடியில் வளரும் ஒரு தாவரத்தின் விதை என்று கடலோடிகள் நம்பினார்கள்.

திருவோடு, துறவிகள் திருவோடு in english, திருவோடு buy online, , திருவோடு எங்கு கிடைக்கும்
திருவோடு என்பது என்ன தெரியுமா?

எனவே பிரெஞ் சொல்லால் “coco de mer” என்று (கடல் தேங்காய்) என்று அழைக்கத் தலைப்பட்டார்கள்..18ஆம் நுாற்றாண்டில்தான் இது Seychelles தீவுகளின் செடிகளிலிருந்து கிடைப்பது என்று அறிய வந்துள்ளார்கள்…

திருவோடு, துறவிகள் திருவோடு in english, திருவோடு buy online, , திருவோடு எங்கு கிடைக்கும்
திருவோடு என்பது என்ன தெரியுமா?

பண்டைய துறவிகள் கைகளிலும் இப்படித்தான் இது கிடைத்திருக்கும். அதைக் குடைந்து ஒரு பாத்திரமாக்கி உபயோகித்திருக்கிறார்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button