சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் டிப்ஸ்
சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் டிப்ஸ் அட இரு நம்ம வீட்டு சமையல் அறையா என்று ஆச்சிரியத்தை தூண்டும் வகையில் உங்கள் வீட்டை பராமரிப்பது போல் வீட்டில் இருக்கும் சமையல் அறையையும் கவர்ச்சிகரமாக வைத்துக்கொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் என்று கணவன்மார்களால் பாராட்டை பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த குறிப்புக்களை ஃபாலோ செய்து உங்கள் வீட்டு சமையல் சமையல் அறையை பக்காவாக வைத்துக் கொள்ளலாம்.
சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் டிப்ஸ்
????உங்கள் வீட்டில் இருக்கும் சமையல் அறையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் சமையல் முடிந்த பிறகு அடுப்பு மேடையையும் அடுப்பை சுத்தம் செய்து விடுவது நல்லது.
????மேலும் தினமும் சமையல் அரை தரையையும், வாரம் இரண்டு முறை சமையல் அறையில் இருக்கும் ஜன்னல்களையும் நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் அதிக அளவு தூசிகள் ஒட்டடைகள் இல்லாமல் இருக்கும்.
???? ஜிங்கிள் அதிக அளவு பாத்திரங்களை நீங்கள் சேர்த்து போட்டு பின் தேய்ப்பதை தவிர்த்து விட்டு பாத்திரம் விழும் போது கையோட கேட்டு தேய்த்து கழுவி விடுவது மிகவும் நல்லது.
????மேலும் தினமும் சேரும் காய்கறி குப்பைகள் பெருக்கும் குப்பைகளை அவ்வப்போது நீங்கள் உடனடியாக சமையல் அறையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும்.
????சமையல் அறையில் துடைப்பதற்கு என்று காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். அந்தத் துணிகள் ஈரமாக இருக்கும் பட்சத்தில் கொசுக்கள் ஈக்கள் வந்து மொய்க்கும்.எனவே அதை ஈரம் இல்லாதபடி நீங்கள் உலர்த்தி பக்குவமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
????நீங்கள் பயன்படுத்தக்கூடிய இரும்பு வாணலி, தோசை கல்லை அவசியம் துடைத்து வைக்க வேண்டும்.சமையல் செய்யும்போது எக்ஸாஸ்ட் பேனை சுற்ற விட மறந்து விடாதீர்கள்.
???? மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சமையலறை பல்பை கழட்டி துடைத்து விடுங்கள். சாமானங்களை வைத்திருக்கும் பகுதிகளில் கரப்பான் பூச்சி காண மருந்து எறும்பு சப்பிஸ் போன்றவற்றை போட்டு அதன் மேல் பேப்பரை விரித்து பொருட்களை வைப்பதன் மூலம் அவற்றின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் சுத்தம் சோறு போடும் என்று கூறினார்கள் என்று.