உனக்கெல்லாம் கதை எழுத முடியாது! ரஜினிகாந்தை அசிங்கப்படுத்திய பிரபலம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் பிஸி ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் படம் என்றாலே எதிர்ப்பார்ப்பை அதிகரிப்பதுதான்.
அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் படம் மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுக்கும். அவரின் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று இருக்கிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்திற்கு கதை சொல்ல முடியாது என்று முகத்துக்கு முன்னாடியே கூறி அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஒரு கதையாசிரியர். அன்னக்கிளி படத்தில் கதையாசிரியராக ஆரம்பித்து முன்னணி கதையாசிரியராக திகழ்ந்து வந்தவர் அன்னக்கிளி. ஆர். செல்வராஜ்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரஜினிகாந்த் என்னை சந்தித்து எனக்காக கதை எழுத கேட்டது குறித்து பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்தபோது பெங்களூருவில் என்னை சந்திக்க ரஜினி வந்தார்.
அப்போது கதை எனக்காக எழுத கேட்டதற்கு உனக்கு எப்படி நான் பண்ணமுடியும். நானே பெண்களை வைத்து கதையை எழுதி வருகிறேன்.
உனக்கு செட்டாகாதே என்று கூறினேன். எம் ஜி ஆர்- ரஜினிக்கு என் கதை செட்டாகாது, ஆனால் சிவாஜி, கமலுக்கு செட்டாகும் என்று கூறியுள்ளார் செல்வராஜ்.
viduppu