எகிப்தில் தங்க அடுக்குகளால் மூடப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு.!!
எகிப்தில் தங்க அடுக்குகளால் மூடப்பட்ட மிகவும் பழமையான மம்மி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கெய்ரோவில் ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட சர்கோபேகஸ் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் முதல் பிரமிடு அமைப்பான சக்காராவில் உள்ள பிரமிட்டுக்கு அருகில் சுமார் 50 அடி ஆழத்தில் இந்த மம்மி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மம்மி 4300 ஆண்டுகள் பழமையானது எனவும், ஹெகாஷெப்ஸ் என்ற மனிதனுடையதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மம்மி கி.மு 2500 முதல் கி.மு 2100 வரையான காலக்கட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.