காதலர் தினத்தன்று ஆணுறைகள் இலவசம்! எந்த நாட்டில் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் திகதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

காதலர் தினத்தன்று, Condoms, free, Valentine's Day, ஆணுறைகள்

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விநோத பரிசை தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. அதாவது காதலர் தினத்தையொட்டி 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

பாலியல் தொற்று பரவல் மற்றும் இளம் வயதில் கருவுறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி விரும்பிய அளவும் ஆணுறைகளை வாங்கி கொள்ளலாம் எனவும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இலவச ஆணுறைகள் கிடைக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button