விண்டோஸ் 10, விண்டோஸ் 11 கணனியில் இருந்து WiFi Password ஐ கண்டுபிடிப்பது எப்படி?

விண்டோஸ் 10 பிசி-யில் இருந்து வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிக்க

– உங்கள் வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10 பிசி-யில், Start பட்டனை கிளிக் செய்து, பின்னர் Settings ஆப்பிற்குள் நுழையவும்.

– செட்டிங்ஸ் ஆப்பில் Network and Internet செக்ஷனை தொடர்ந்து Status என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

– பின்வரும் ஸ்க்ரீனில் Network and Sharing Center விருப்பத்தை தொடர்ந்து Connections என்கிற விருப்பத்திற்குள் செல்லவும்.

10 பிசி யில் இருந்து வைஃபை பாஸ்வேர்ட் ஐ கண்டுபிடிக்க

– இப்போது ஸ்க்ரீனில், உங்கள் வைஃபை நெட்வொர்க்கின் பெயரை தேர்வு செய்யவும்.

– பின் WiFi Status இல் Wireless Properties என்பதை தேர்வு செய்து பிறகு Security டேப்-ஐ கிளிக் செய்யவும்.

– கடைசியாக Show characters செக்-பாக்ஸை கிளிக் செய்ய, உங்கள் வைஃபை பாஸ்வேர்ட் ஆனது நெட்வொர்க் செக்யூரிட்டி கீ பாக்ஸில் (Network security key box) காட்சிப்படுத்தப்படும்; அவ்வளவுதான்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பாஸ்வேர்ட்-ஐ மற்ற ஸ்மார்ட்போன்களில் அல்லது லேப்டாப்களில் உள்ளிட, உங்களின் வைஃபை நெட்வொர்க்கை அவைகளுடன் ஷேர் செய்ய முடியும்.

[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”yes” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”3″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

விண்டோஸ் 11 பிசி-யில் இருந்து வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிக்க

உங்கள் வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 11 பிசி-யில் Start பட்டனை கிளிக் செய்து பின் Control Panel என்று டைப் செய்யவும்.

– இப்போது கண்ட்ரோல் பேனலுக்குள் சென்று Network and Internet என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

– பின்வரும் ஸ்க்ரீனில், Network and Sharing Center என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

– பிறகு Network and Sharing Center-இன் கீழ் அணுக கிடைக்கும் Connections.என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

– இப்போது ​உங்கள் வைஃபை நெட்வொர்க் பெயரை தேர்வு செய்யவும்.

– பின், Wi-Fi Status இல் Wireless Properties என்பதை தேர்வு செய்யவும்.

– கடைசியாக Wireless Network Properties இல் Security என்கிற டேப்-ஐ கிளிக் செய்து பின் Show characters என்கிற செக்-பாக்ஸை கிளிக் செய்யவும்; அவ்வளவுதான்!

இப்போது உங்களின் வைஃபை பாஸ்வேர்ட் ஆனது நெட்வொர்க் செக்யூரிட்டி கீ பாக்ஸில் (Network security key box) காட்சிப்படுத்தப்படும். இந்த பாஸ்வேர்ட்-ஐ உள்ளிட மற்ற ஸ்மார்ட்போன்களில் அல்லது லேப்டாப்களில் குறிப்பிட்ட வைஃபை நெட்வொர்க்கை இணைக்க முடியும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button