Breaking News

தல தோனியை புகழ்ந்து வெங்கடேஷ் ஐயர் போட்ட ட்விட்… ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!

நடிப்பு உலகின் தல என அல்டிமேட் ஸ்டார் அஜித்தை சொல்வது போல, கிரிக்கெட் உலகின் தல என்றே நாம் தோனியை சொல்லலாம். ரசிகர்களும் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் பலரும் தோனி வெறியர்கள் தான்!

அந்த தல தோனியைப் பாராட்டி வெங்கடேஷ் ஐயர் போட்ட ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் கல்கத்தா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவர், கடைசி பந்தில் சென்னை வென்றது. இந்த விஸ்வரூப வெற்றியால் சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்தது. இந்த தோல்வி கொல்கத்தா அணியை முடக்கிப் போட்டது. இந்தப் போட்டி முடிந்ததும் வெங்கடேஷ் ஐயர் தோணியிடம் சில அட்வைஸ்களையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில்தன் ட்விட்டர் பக்கத்தில் தோணியை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ் ஐயர். அதில், ‘தல தல தான். வாத்தியின் அறிவுரை கடினமாக சூழ்நிலைகளில் எவ்வாறு கையாளவேண்டும் என மாணவனான எனக்குக் கற்பித்துள்ளார். எல்லா காலத்திலுமே அவர் தான் சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர்’ என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் இப்போது செம வைரல் ஆகிவருகிறது.

About admin

Check Also

“பாவாடையை மேல் தொடை வரை கிழித்து விட்டு…” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரித்திகா சிங்..! – வைரல் போட்டோஸ்..!

சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் காலடி எடுத்து வைக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *