Breaking News

பிக் பாஸ் சீசன் 5ல் களமிறங்கும் பக்கா என்டர்டைன்னர்.. சன் டிவி பிரபலத்தை தட்டி தூக்கிய விஜய் டிவி

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது.

எனவே இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

எனவே இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, பவானி ரெட்டி, சூசன், திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது.இவர்களுடன் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இமான் அண்ணாச்சி ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார். இவர் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. மேலும் இவருடைய திருநெல்வேலி பேசினாலே எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார்.

ஆகையால் இந்த சீசனில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்வதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About admin

Check Also

ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.. இணையத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *