Breaking News

வீட்டுக்குள் நுழைந்த பாம்பு.. எவ்வளவு பாசமா வழியனுப்புறாங்க பாருங்க.. இதெல்லாம் கோயம்பத்தூர் காரர்களால தான் முடியும்..!

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒரு பெண் பாம்பை அசால்டாக டீல் செய்வது சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கோயம்புத்தூர் பகுதியில் உள்ள அந்த வீட்டில் பாம்பு புகுந்துவிட்டது. உடனே அந்த வீட்டின் தலைவி பதறவில்லை. மாறாக பாம்பிடம் அன்பாக உரையாடத் துவங்கினார். ’போடி தங்கம். நான் புத்துக்கு பால் ஊத்துறேன். இந்த கோட்டைக்குள்ளேயே வரக் கூடாது. நான் வர்றேன் சாமி..வந்து பால் ஊத்துறேன்.’ என அன்பொழுக பேசிக்கொண்டே விரட்டுகிறார். ஏதோ குட்டிக்குழந்தைக்கு புத்திமதி சொன்னது போல பாம்பு திரும்பிச் செல்கிறது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன்.

About admin

Check Also

தன்னைவிட 9 வயது சிறிய நடிகருடன் நெருக்கமான காட்சியில் கமல் மகள் சுருதிஹாசன்? (Video)

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *