பில்லியனர்களுக்கு வலைவீச்சா? கீழவையால் ஆப்பு ரெடி…
பில்லியனர்களுக்கு வலைவீச்சா? கீழவையால் ஆப்பு ரெடி...
பில்லியனர்கள் ,வரிவிதிப்பு மூலமாக அரசின் வலையில் சிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இதற்கு காரணம், பிரான்சின் கீழவை சபை 2025-ஆம் ஆண்டு பட்ஜெட் திருத்தத்தில் பில்லியனர்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பதற்கான திருத்தத்தை அங்கீகரித்துள்ளமையேயாகும்.
La France Insoumise கட்சியினர் ஆதரித்த இந்த திருத்தம் பிரபல பொருளாதார நிபுணர் Gabriel Zucman முன்மொழிந்த பில்லியனர் வரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின் மூலம், 1 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான செல்வம் கொண்டவர்களுக்கு 2% வரி விதிக்கப்படும்.
இது செயல்படுத்தப்பட்டால், 13 பில்லியன் யூரோக்களை வருவாய் ஆகப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த சட்டத் திருத்தம் மேலும் செனட் சபையின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிரெஞ்சு அரசால் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்ஜெட் 60 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரிச் செலவுகளை குறைக்க மற்றும் வரி உயர்வுகளை ஏற்படுத்தும்.
இதில் பில்லியனர் வரியை தவிர, பாரிய நிறுவனங்களின் இலாபங்களில் கூடுதல் வரி விதிப்பது மற்றும் அபரிமிதமான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி உயர்வு போன்றவை அடங்கும்.