இதயம் பலவீனமானவங்க இத வாசிங்க: இல்லேன்னா உயிர் போயிரும் ….
இதயம் பலவீனமானவங்க இத வாசிங்க: இல்லேன்னா உயிர் போயிரும் ....
இதயம் எனும் மனிதனின் மூல இயந்திரத்தை இந்த நவீன உலகில் யாரும் பொருட்படுத்துவதில்லை.
உலகம் முழுவதும் இதயம் தொடர்பான நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக இதயத்தில் பிரச்சனை இருந்தால், நெஞ்சு பகுதியில் இறுக்கம், வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அதிகப்படியான அழுத்தம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைவருமே அறிவோம்.
ஆனால், இதைத் தவிர இன்னும் நிறைய பேர் கவனிக்க தவறும் வேறு சில முக்கியமான அறிகுறிகளும் உள்ளதாக அமெரிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் . ஜெர்மி லண்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். இந்த அறிகுறிகள் சாதாரணமானதாகவே இருக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை வரவழைத்து, நிலைமையை மோசமாக்கிவிடுவதாகவும் கூறியுள்ளார்.
கீழே வைத்தியர் . ஜெர்மி லண்டன் தனது இன்ஸ்டாவில் கூறிய இதயம் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் வைத்தியர் கூறியுள்ளார்.
நடக்கும் போது மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறல் இதய செயலிழப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். வைத்தியர் லண்டனின் கூற்றுப்படி, இதயத்தில் பிரச்சனை இருந்தால், லேசான உடலுழைப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கும். பின் படிப்படியாக நடந்தாலே மூச்சு வாங்கத் தொடங்கி, அதன் பின் ஓய்வு நேரத்திலும் மூச்சு வாங்கலாம்.
இப்படி மூச்சு வாங்கும் போது, சுவாசிப்பது மிகவும் கடினமாகவோ, வேகமாகவோ இருக்கலாம். அதுவும் இப்படி மூச்சு திணறல் ஏற்படும் போது, அத்துடன் கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம், குளிர், இருமல், உயர் காய்ச்சல் அல்லது வீசிங் போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர் லண்டன் கூறுகிறார்.
கால்களில் வீக்கம்
கால்களில் திரவங்கள் தேங்கும் போது, கால்களில் வீக்கம் ஏற்படும். இதை எடிமா என்று அழைப்பர். வைத்தியர் லண்டனின் கூற்றுப்படி, கால்களில் இருந்து இரத்தமானது மேல் நோக்கி செல்லாமல் கால்களில் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தினால், இதயம் சரியாக செயல்படாமல் இருக்கலாம். இப்படியான திடீர் கால் வீக்கம் இதய செயலிழப்பின் முக்கியமான அறிகுறியாகும்.
எப்போது ஒருவரது இதயம் சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக கால்களில் இரத்தம் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது உடல் எடையை அதிகரிக்கலாம். அதுவும் ஒருவர் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம், தலைச்சுற்றல் அல்லது இரத்தம் கலந்த சளியுடன், கால்களில் திடீரென்று வீக்கம் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று வைத்தியர் லண்டன் கூறுகிறார்.
இருமல்
இதயம் சரியாக செயல்கடாமல் இருந்தால் வெளிப்படும் மற்றொரு முக்கிய அறிகுறி இருமல் ஆகும். இருமல் வந்தால் நுரையீரலில் தான் பிரச்சனை என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இதயம் சரியாக செயல்படாமல் இருந்தாலும், அதன் விளைவாக இருமலை சந்திக்க நேரிடும். அதுவும் இதயத்தில் பிரச்சனை இருந்தால், இருமலின் போது இரத்தம் கலந்த சளி வெளியேறும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.