Breaking News

மார்புக் காம்பு காயமடைந்தால் என்ன செய்யவேண்டும்? பெண்களுக்கு மட்டும்…

தாய்ப்பால்… நம் ஒவ்வொருவரின் உயிர்ப்பால். நம் கடைசி நாள் வரை நமது ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் தாய்ப்பாலின் பங்கு அதிகம். குழந்தையின் அடிப்படை உரிமை தாய்ப்பால். அதை முறையாகக் கொடுக்கவேண்டியது நமது கடமை.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உலகம் அறியச் செய்யவே இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

‘யுனிசெஃப்’ நிறுவனமும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்கப்பெறும் குழந்தைகள் 55 சதவீதத்தினர் மட்டுமே. தாய்ப்பால் பற்றாக்குறையால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் 2,36,000 குழந்தைகள் இறப்பைச் சந்திக்கின்றனர்.

இந்தியாவில் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குழந்தைகளின் மரணத்தைத் தழுவுகின்றனர். இதைத் தடுக்க, குழந்தைப் பிறந்தவுடன், துரிதமாகத் தாய்ப்பால் தருவது, ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தருவது ஆகியவற்றால் தடுத்துவிட முடியும்.

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்துவிடும் என்ற மூட நம்பிக்கையில் இருந்து பெரும்பாலான பெண்கள் வெளியே வந்துவிட்டனர். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை முழுமையாக அளித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் உணர்வுத் தடுமாற்றங்களாலும் (Mood Swing) தாய்ப் பாலை சரியாகக் கொடுக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

தாய்ப்பாலின் முக்கியம், எப்படிக் கொடுக்கவேண்டும்? ஏன் கொடுக்க வேண்டும், காயமானால் என்ன செய்யவேண்டும், பாலை அதிகரிப்பது எப்படி, எவ்வளவு நாட்கள் பால் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்.

தாய்ப்பால் ஏன் முக்கியமானது, அவசியமானது?
தாய்ப்பால் ஒரு முழுமையான உணவு. அதிலும் குழந்தை பிறந்து முதல் 3 நாட்களுக்கு வரும் சீம்பாலில் (colostrum) அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், இரும்புச்சத்து என எல்லாமே இதில் இருக்கிறது. அதேபோல எந்த மருந்திலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆனால் தாய்ப்பாலில் கிருமிகளை எதிர்க்கும் தடுப்பு மருந்து இருக்கும்.

READ ALSO THIS :- குழந்தை பெறாமல் தாய்ப்பால் சுரக்குமா? பலரது சந்தேகங்களுக்கான மருத்துவ தகவல்கள்

அத்துடன் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஐ.க்யூ. சிறப்பாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் காதில் சீழ் வராது. சிறுநீர்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைவு. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, வயிற்றுப்போக்குக்கான வாய்ப்பு 9 மடங்கு குறைகிறது.

நிமோனியாவுக்கான வாய்ப்பு 5 மடங்கு குறைகிறது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதும் கணிசமான அளவில் குறைகிறது. ஆஸ்துமா, உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலமான ஆபத்து குறைகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதேபோல நன்மைகள் உண்டா?

குழந்தையைப் போலவே தாய்க்கும் பால் கொடுப்பதில் நிறைய பலன்கள் உண்டு. மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய், கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் குறைவு.

பிறந்த உடனே பால் கொடுப்பதால், தாயின் ரத்தப்போக்கு குறைந்து, ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏறிய உடல் எடை, பால் கொடுக்கும்போது தானாகவே குறைகிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் பீரியட்ஸ் வரும் வாய்ப்பும் குறைவாக உள்ளது.

வேறு என்ன நன்மை உண்டு?

அதேபோல சமுதாயமும் இதனால் பலன் அடைகிறது. குழந்தைக்கு மற்ற பார்முலா உணவுகள் கொடுப்பது, வெளியில் பாலை வாங்கி கொடுப்பது, இதர உணவுகளைக் கொடுப்பதால் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனை செல்வது தாய்ப்பாலை முறையாக கொடுப்பதால் தடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மிச்சமாகின்றது.

க.சே. ரமணி பிரபா தேவி

தொடரும்………….

Related posts