Breaking News

நடிகை ரீமா சென்னா இது? எப்படி இருந்தவர்.. இப்படி ஆகிட்டாரே?

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒருகாலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் ஹீரோயினாக அறிமுகமான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலே பயங்கர ஹிட் அடித்தது. இப்போதும் இதில் இடம்பெற்ற பாடல்கள் இளைஞர்களின் ஆல் டை, பேவரட்டாக உள்ளது.

விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் ரீமாசென். ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது. ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனானே..’பாடலும் இவர் ஆடி ஹிட் அடித்தது.

சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில்; நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரீமாசென். இதில் லவ் என்னும் பெயரில் டார்ச்சர் கொடுக்கும் பெண்ணாக வந்து அதகளம் செய்து இருப்பார்.

தமிழ் மட்டுமல்லாது பலமொழிகளிலும் நடித்திருக்கும் ரீமாசென் கடந்த 2012ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத்தம்பதிக்கு இப்போது ‘ருத்ரவீர்’ என்ற மகனும் உள்ளார். அண்மையில் தனது பத்தாவது திருமண நாளையும், குடும்பத்தோடு கொண்டாடினார் ரீமா சென்.

அப்போது எடுத்த புகைப்படங்களில் செம குண்டாகி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார் ரீமாசென். அதைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த ரீமாசென், இப்படி ஆகிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts