Breaking News

காதலனின் ஆணுறுப்பை அறுத்து சமைத்து சாப்பிட முயன்ற காதலி..!!!

காதலி ஒருவர் காதலனின் ஆணுறுப்பை அறுத்து குக்கரில் சமைத்து சாப்பிட முயன்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்.

சைக்கோ கொலைகாரர்கள் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். அப்படியாக சைக்கோ கொலை செய்யும் பெண் ஒருவர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியின் உள்ள கிரீன்பே பகுதியில் கடந்த பிப் 23ம் தேதி ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஒரு பக்கெட் உள்ள ஒரு ஆணின் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சோதனையிட்டபோது தலைமட்டுமே இருந்தது. பின்னர் இறந்தது யார் என பார்க்கும் போது அந்த வீட்டிலிருந்த பெண்ணின் மகன் என்பது தெரியவந்தது.

அவர் குறித்து விசாரித்த போது அவரை கடைசியாக அவரது காதலியுடன் சிலர் பார்த்துள்ளனர் என தெரியவந்தது. அவரது காதலியை பிடித்து விசாரித்த போது தான் உண்மையே வெளியே வந்துள்ளது. அவரும் அவரது காதலியும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் சம்பவத்தன்று இருவரும் போதை பொருளை பயன்படுத்திவிட்டு வீட்டில் உடலுறவு வைத்துள்ளனர். இதில் இருவரும் போதை தலைக்கேற என்ன செய்கிறோம் என்ற தெரியாத நிலையில் இருந்துள்ளனர்.

இதில் இருவருக்கும் அப்பொழுது போதையில் காதலி காதலனின் கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள உள்ள பாத்திரங்களில் போட்டு ஒவ்வொரு அறையாக உடலை வைத்துள்ளார். மேலும் காதலியை கைதுசெய்த இடத்தில் காதலனின் ரத்த கரைபடித்த துணிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக போலீசார் சோதனை நடத்திய போது வீட்டில் இறந்தவரின் ஆணுறுப்பு ஒரு குக்கரில் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது தனக்கு அவரை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் போதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை எனவும் தான் அவரது ஆணுறுப்பை சமைத்து சாப்பிட முயன்றிருக்கலாம் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

காதலியே காதலனை கொன்று அவரது ஆணுறுப்பை சமைத்து சாப்பிட முயன்ற சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Related posts