Breaking News

நியூயார்க் : ரயிலுக்குமுன் தள்ளிவிடப்பட்டு உயிர் தப்பிய ஆடவர்

அமெரிக்காவின் மன்ஹாட்டன் (Manhattan) வட்டாரத்திலுள்ள ரயில் நிலையத்தில் எதிரேவந்த ரயிலுக்கு முன்னால் தள்ளிவிடப்பட்டார் 61 வயது ஆடவர்.

நேற்றுக் காலை (23 ஜனவரி) சுமார் 11.30 மணிக்கு அவர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது சம்பவம் நேர்ந்தது. ரயில் வருவதற்குமுன் ரயிலுக்காகக் காத்திருக்கும் இடத்தில் ஏறி மின்சாரம் பாய்ந்த மூன்றாவது ரயில் தளத்தைத் தொடுவதைத் தவிர்த்தார் அவர்.

சிறு காயங்களுக்குள்ளான அந்த ஆடவர், ப்ரெசிபடீரியன் (Presybterian) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சுயநினைவோடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தள்ளிவிட்டதாக நம்பப்படும் ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பேச்சாளர் ஒருவர் கூறினார்.

8 நாள்களுக்குமுன் நியூயார்க் நகரின் Times Square ரயில் நிலையத்தில் ரயிலுக்கு முன்னால் மிஷெல் கோ (Michelle Go) என்ற பெண் தள்ளிவிடப்பட்டார். நியூயார்க்கில் அதிகரிக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்த அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் (Eric Adams) உறுதியளித்துள்ளார்.

ஆதாரம் : Others/The Independent

Related posts