கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த 18 வயதான உதயகுமார் பானுசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் புகையிரத பாதையினை கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நாளைய தினம் பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.