நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு எண்ணெய் குளியல் மிகவும் உதவியாக இருக்கின்றது. பொதுவாக நல்லெண்ணெய் பயன்படுத்தியே குளிக்க வேண்டும்.
சிலருக்கு சளி பிடிக்கும் என்று நினைத்தால், எண்ணெய்யில் ஒரு பல் பூண்டை தோலுடன் போட்டு காய்ச்சி பயன்படுத்தாலாம். அதே போன்று எண்ணெய் குழியல் எடுக்கும் பொழுது சூர்ய உதயத்திற்கு முன்பே குளிப்பது நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு காரணம், அதிகாலையில் தான் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்தார் அதனாலேயே நாம் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. அதோடு இப்படி குளிப்பதன் மூலமாக நம்மிடம் இருக்கும் இருள் நீங்கி மெய்ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம்.