Breaking News

90ஸ் கிட்ஸ்களின் பேவரட் சக்திமான் இப்போது என்ன ஆனார் தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்..!

90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் விசயங்கள் என்றே சில இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் இப்போதும் குதூகலித்துப் போய் விடுவார்கள். அந்தவகையில் சக்திமானுக்கு முக்கிய இடம் உண்டு.

துர்தர்சனில் ஒளிபரப்பாகி பெரும் ஹிட் அடித்தத் தொடர் தான் சக்திமான். உலகில் எங்கே அநியாயம் நடந்தாலும் சக்திமான் வந்து காப்பாற்றுவார். அதிலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால் சக்திமான் விரைவாக வந்துவிடுவார். சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்து அந்த சீரியல் ஒளிபரப்பான நேரத்தில் சில குழந்தைகள் மாடியில் இருந்தும் குதித்தன. இதனாலேயே இந்த சீரியல் நின்றும்போனது.

சக்திமான் போன்ற உடையும் அப்போது கடைகளுக்கு வந்தது. குழந்தைகள் அதை வாங்கி அணிந்துகொள்ளும் அளவுக்கு அந்தத் தொடர் ஹிட் அடித்தது. இந்த சீரியலில் சக்திமானாக நடித்தவரின் நிஜப்பெயர் முகேஷ் கண்ணா. அவர் இதுகுறித்து கூறும்போது, ‘இப்போது இருக்கும் டெக்னாலஜியில் பாகுபலிக்கே சவால்விடும் அளவுக்கு எடுக்கமுடியும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் இந்த சக்திமான் ரீ எண்ட்ரி கொடுப்பான்.

இப்போது பாஜகவில் உறுப்பினராக உள்ளேன். அதிலும் அரசுக்கு பல நல்ல ஆலோசனைகளைச் சொல்லிவருகிறேன்.’என்றார். இப்போது சக்திமான் முகேஷ் கண்ணா வயதான தோற்றத்தில் இருக்கும் ப்கைப்படம் இனையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts