உயிர்பெறும் சஹாரா? அதிர்ச்சியில் உலகம்…

உயிர்பெறும் சஹாரா? அதிர்ச்சியில் உலகம்...

உயிர்பெறும் சாத்தியதோடு சஹாரா பாலைவனம் தோற்றமளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபமாக உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் பிரபலமான சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்பெறும், சஹாரா, அதிர்ச்சியில், உலகம்

புவி வெப்பமயமாதல், அதிகரிக்கும் மாசுபாடு காரணமாக உலகத்தின் பருவநிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக பல ஆண்டுகளாகவே சுற்றுசூழல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை பெரிய அளவில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடும் கோடை வெப்பத்தினால் பலர் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வரும் அதே சமயம் கடும் வறட்சி மிகுந்த பாலைவனங்களிலும் மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மொராக்கோ நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இரிக்கி ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மிக நீண்ட பாலைவனமாக உள்ள சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இவை பருவநிலை மாற்றத்தின் விளைவு என குறிப்பிடும் இயற்கை ஆர்வலர்கள், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் பேசி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button