மாதம் 12இல் நீங்க எந்த மாதம்? நொடிப்பொழுதில் குபேரனாகலாம் …
மாதம் 12இல் நீங்க எந்த மாதம்? நொடிப்பொழுதில் குபேரனாகலாம் ...
மாதம் 12இல் நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தாலும் உங்களுக்கு அதிஷ்டம் எப்போதாவது இருப்பதென்பது உறுதியானது.
ஒருவரது பிறந்த திகதி அந்நபரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அந்நபரின் குணாதிசயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த மாதம் அந்நபரின் குணங்கள், தொழில் வாழ்க்கை, நிதி நிலைமை, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களைப் பற்றி தெரியப்படுத்தும்.
நீங்கள் உங்களின் மறைமுகமான குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்களின் பிறந்த மாதம் என்னவென்று சொல்லி, கீழே அந்த மாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள குணங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜனவரி
நீங்கள் ஜனவரி மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் தைரியமானவர்கள் மற்றும் மற்றவர்களின் கருத்துகளுக்காக உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். வேலை என்று வரும் போது நீங்கள் கடுமையான நடத்தையைக் கொண்டிருப்பீர்கள். உங்களின் லட்சியங்களுக்கு இடையூறாக எதையும் அனுமதிக்கமாட்டீர்கள். சிறந்த தலைவராக இருப்பீர்கள்.
பிப்ரவரி
நீங்கள் பிப்ரவரி மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பீர்கள். நல்ல அறிவார்ந்த விவாதங்களை விரும்புவீர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புடீவர்கள். சாகசங்கள் மற்றும் பயணங்களை அதிகம் விரும்புவீர்கள். நீங்கள் மிகவும் விசுவாசமான நண்பர்கள் மற்றும் மற்றவர்கள் மீது அதிக அக்கறையைக் கொண்டிருப்பீர்கள்.
மார்ச்
நீங்கள் மார்ச் மாதத்தில் பிறந்திருந்தால், நல்ல கற்பனைத் திறனைக் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுடன் அதிகம் பேசமாட்டீர்கள். கூச்ச சுபாவம் கொண்டவர்கள். உங்களின் உணர்வுகளை கலையின் உதவியுடன் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் மென்மையானவர்கள், கருணை உள்ளம் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அமைதியை விரும்புவீர்கள். இதனால் எங்கு சென்றாலும் அமைதியை தேடுவீர்கள்.
ஏப்ரல்
நீங்கள் ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மேலாதிக்கம் கொண்டிருப்பீர்கள். எதையும் நேரடியாக சொல்லக்கூடியவர்கள். இதனால் மற்றவர்களால் விரும்பத்தகாதவர்களாக இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி சிறிதும் கவலைப்படமாட்டீர்கள். உங்களுக்கு பிடித்தவாறு தான் எப்போதும் இருப்பீர்கள். கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். இதனால் பல நண்பர்களை கொண்டிருப்பீர்கள்.
மே
மே மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்களாக இருப்பீர்கள். சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எங்கு சென்றாலும் நண்பர்களை எளிதில் உருவாக்குவீர்கள். புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப, வேடிக்கையானவர்களாகவும் இருப்பீர்கள். ஒரு இடத்தில் உங்களால் இருக்க முடியாது. ஏதாவது வேலை செய்தவாறு இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். அடிக்கடி தங்கள் கருத்துக்களையும், ஆசைகளையும் மாற்றிக் கொள்வீர்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் அன்பானவர்கள். அதிகம் பேசமாட்டீர்கள். நீங்கள் உங்களுக்கான ஆக்கப்பூர்வமான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு உங்களின் தொலைநோக்கு பார்வையை பயன்படுத்துவீர்கள். நீங்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். அதே வேளையில் எளிதில் பொறாமை கொள்பவராகவும் இருப்பீர்கள்.
ஜூலை
நீங்கள் ஜூலை மாதத்தில் பிறந்திருந்தால், மிகவும் மகிழ்ச்சியான முகத்தை எப்போதும் கொண்டிருப்பீர்கள். சாகசங்களை விரும்புவீர்கள். அனுதாபம் மற்றும் இரக்கம் காட்டுவீர்கள். நீங்கள் தனிமை விரும்பிகள் மற்றும் சற்று விசித்திரமானவர்களும் கூட. அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். அன்பானவர்கள் ஆனால் எப்போதுமே அப்படி இருக்கமாட்டீர்கள். சட்டென்று கோபம் வரும் மற்றும் எளிதில் உங்களின் மனம் காயப்படும்.
ஆகஸ்ட்
நீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் சமூக சேவை செய்வதில் ஆர்வம் அதிகம் கொண்டிருப்பீர்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். அனைவர் மீது அன்பு செலுத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் கொண்டிருப்பீர்கள். ஆனால் இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள் என்பதால் உங்களுக்கு பணப் பிரச்சனையே வாழ்வில் வராது.
செப்டம்பர்
நீங்கள் செப்டம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் புத்திசாலி, ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் கொண்டவர். எப்போதும் தங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களால் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். சிறந்த மேதைகளாக இருப்பீர்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகவும் ஆழமாக பார்ப்பீர்கள். இது உங்களிடம் உள்ள ஒரு மோசமான குணம்.
அக்டோபர்
நீங்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். எப்போதும் அதிர்ஷ்டம் பக்கபலமாக இருக்கும். எப்போதும் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கடினம். பழிவாங்கும் குணம் கொண்டிருப்பீர்கள். கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள். எளிதில் பொறாமைபடுவீர்கள். மிகவும் உண்மையானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள்.
நவம்பர்
நீங்கள் நவம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் நேர்மறையானவர்கள் மற்றும் தெளிவானவர்கள். பெருந்தன்மை உங்களின் வலுவான பண்புகளில் ஒன்றாகும். நீங்கள் தைரியமானவர்கள், ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். எதையும் துணிந்து செய்வீர்கள். பாராட்டை விரும்பமாட்டீர்கள். கோபத்தைத் தவிர மற்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமாட்டீர்கள். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள்.
டிசம்பர்
நீங்கள் டிசம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் சரியான வேலை மற்றும் வாழ்க்கைத் துணையைப் பெறுவீர்கள். ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டீர்கள். இதனால் வாழ்வில் பல ஆபத்தான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். விதிகளை பின்பற்றமாட்டீர்கள். நிறைய தேச பக்தியைக் கொண்டிருப்பீர்கள்.