பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரான்சில் எல்லை கட்டுப்பாடுகளா?
பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரான்சில் எல்லை கட்டுப்பாடுகளா?
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக எல்லை கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல், மீண்டும் எல்லைக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யவுள்ளதாகவே கூறப்படுகிறது.
எப்போது எல்லை கட்டுப்பாட்டில் தளர்வு?
பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை எல்லைக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
Advertisements
ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் எல்லைக்கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் ஐரோப்பிய ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
தற்போதுள்ள எல்லைக்கட்டுப்பாடுகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 1ஆம் திகதி, புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisements