லண்டனில் களைகட்டும் யாழ். பல்கலைகழகத்தின் பொன்விழா ஏற்பாடுகள்

லண்டனில் களைகட்டும் யாழ். பல்கலைகழகத்தின் பொன்விழா ஏற்பாடுகள்

லண்டனில் களைகட்டும் யாழ். பல்கலைகழகத்தின் பொன்விழா ஏற்பாடுகள்

லண்டனில் எதிவரும் நவம்பர் 30 ம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ், நோர்வே மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், LIFT அமைப்புடன் இணைந்து ஒழுங்கமைத்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி இலண்டனில் நடைபெற இருக்கிறது.

Advertisements

LIFT அமைப்பு பல்கலைகழக ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்கோடு யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனமாகும். குறிப்பாக எமது தமிழ்ப்பிரதேசங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கான பிரத்தியேக நிதிமூலமாக செயற்படும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரையில் பல ஆய்வுகளுக்கு தனது பங்களிப்பை செய்துள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களும் இந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

IMG 20240114 WA0004 gate1

1974ஆம் ஆண்டு, பல கல்விமான்களதும் அரசியல் பிரமுகர்கள் சிலரதும் அயராத முயற்சியினால் முன்னெடுக்க பட்டு, அன்றைய இலங்கை பிரதமரினால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் பின்னர் தனித்த பல்கலைக்கழகமாகி தனக்கேயுரிய மெருமைகளோடு இன்று பொன்விழா கண்டு நிற்கிறது. இரண்டு பீடங்களுடன் ஆரம்பிக்க பட்ட பல்கலைக்கழகம் இன்று 12 பீடங்கள் கொண்டாதாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வேளையில் அதன் பழைய மாணவர்களாக நாமும் அதன் உரித்துடையவர்களாக எமது மக்களும் பெருமையோடு இண்டனில் இந்த விழா ஏற்பாடுகளை செய்துள்ளோம். எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி இலண்டன் நகரத்தில் Slough என்ற இடத்தில் உள்ள Crystal Grand Banquet Hall மணடபத்தில் பொன்விழா நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயல் , இசை, நாடகம் உள்ளடங்கிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடலாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது.

இலங்கை தமிழ் சமூகத்தின் சொத்துக்களில் ஒன்றான யாழ் பல்கலைக்கழகத்தின் 50 வருட சாதனைப் பெருமிதத்துடன் சங்கமிக்க நலன்விரும்பிகள், பழையமாணவர்கள், அவர் களின் குடும்பத்தினர் என அனைவருக்கும் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பேருவகையையும் உருவாக்கியுள்ள நவம்பர் 30 கொண்டாட்ட நிகழ்வு ஒரு மிகவும் முக்கியமான வரலாற்று நிகழ்வு என்பதையும் இங்கே குறிப்பிட்ட வேண்டும். ஏனெனில் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்கள் முதல் கடந்த வருட பட்டமளிப்பு விழவில் பட்டம் பெற்று வெளியேறியவர்கள் வரை எல்லோரையும் தம்மால் ஒன்றிணைக்க முடிந்துள்ளதாக, விழாவின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பழைய மாணவர்கள் பரந்து மிகவும் குறுகிய எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதும் , தம்மிடையே தொடர்புகள் குறைந்திருந்ததாலும் வலுவான ஒரு கட்டமைப்பை செய்ய வாய்த்திருக்கவில்லை. எனினும் இந்த நிகழ்வு ஐரோப்பாவில் இருக்கும் பழைய மாணவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறது என்ற வகையிலும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாகும்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் , இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சார்பிலும் LIFT அறக்கட்டளை அமைப்பின் சார்பிலும் பழைய மாணவர்கள், அவர்களின் குடும்பங்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம் என்று ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பற்றிய தொடர்புகளுக்கு, 

+44 794040 8771 அல்லது +33 65147 5803 

ஆகிய இலக்கங்களுடன் 

தொடர்பு கொள்ளலாம்.
Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button