சிம், இன்டர்நெட் இன்றி விரைவில் செல்போனில் லைவ் வீடியோ பார்க்கலாம்!
[ad_1]
சிம், இன்டர்நெட் இன்றி விரைவில் செல்போனில் லைவ் வீடியோ பார்க்கலாம்! இந்தியாவில் செல்போனில் சிம்கார்டு, இன்டர்நெட் வசதி இன்றி லைவ் வீடியோக்களை பார்க்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசின் திட்டம் என்ன? சிம்கார்டு, இன்டர்நெட் வசதியின்றி செல்போனில் எப்படி லைவ் வீடியோக்களை பார்க்க முடியும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் சில வீடுகளில் மட்டுமே லேண்ட்லைன் தொலைபேசி என்பது இருந்தது. அதன்பிறகு முக்கிய கடைகளில் ஒரு ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி பேசும் தொலைபேசி அறிமுகம் ஆனது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் பயன்பாடு என்பது விறுவிறுவென அதிகரித்தது. முதலில் பட்டன் செல்போன்களை வாங்கி பயன்படுத்திய மக்கள் இப்போது ஆன்ட்ராய்டு, ஐபோன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது செல்போன் ஏறக்குறைய அனைவரின் கைகளிலும் வந்துவிட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் மூலம் முதியவர்கள் வரை அனைவரும் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இன்டர்நெட் வசதி மூலம் லைவ் வீடியோக்களை மக்கள் பார்த்து வருகின்றனர். இதன்மூலம் உலகின் எந்த மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் கூட லைவ்வாக மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்க முடிகிறது.
தற்போதைய சூழலில் நாம் ஆன்ட்ராய்டு, ஐபோன்களில் லைவ் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் இன்டர்நெட் வசதி என்பது கண்டிப்பாக வேண்டும். சிம்கார்டுகளை செல்போனில் போட்டு அதன்மூலம் இன்டர்நெட் வசதியை பெறலாம். மாறாக மோடம் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்கள் வழியாகவும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் தான் மத்திய அரசு தற்போது புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது செல்போனில் சிம்கார்டு, இன்டர்நெட் வசதி இன்றி லைவ் வீடியோக்களை பார்க்கும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை டைரக்ட் டூ மொபைல் (டி2எம் அல்லது D2M) தொழில்நுட்பம் மூலம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி சமீபத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலர் அபூர்வ சந்திரா கூறியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டி2எம் தொழில்நுட்பத்தின் சோதனைகள் விரைவில் 19 நகரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.
இதற்காக 470-582 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 25-30 சதவீத வீடியோ டிராஃபிக்கை டி2எம்-க்கு மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க்குகளின் சேவை என்பது மேம்படும். இது நாட்டின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
கடந்த ஆண்டு, பெங்களூரு, கர்தவ்யா பாத் மற்றும் நொய்டாவில் டி2எம் தொழில்நுட்பத்தை சோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் தற்போது 280 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) குடும்பங்களில் 190 மில்லியன் குடும்பங்களில் மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன.
அதோடு நாட்டில் 80 கோடி ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றனர். ஸ்மார்ட்போன்களை பயன்பாட்டில் 69 சதவீதம் என்பது வீடியோ வடிவில் தான் உள்ளது. இப்படி வீடியோக்களை அதிகமாக பார்ப்பதால் இணைய சேவைகள் என்பது பாதிக்கப்படுகிறது.
இதனால் இணை சேவைகளின் வேகம் என்பது பாதிக்கப்படுகிறத. இதனால் இந்த மாற்று திட்டம் என்பது அவசியமாகும்’’ என்றார். சிம்கார்டு மற்றும் இன்டர்நெட் இன்றி செல்போனில் வீடியோவை பார்க்கும் தொழில்நுட்பமாகன டி2எம் என்பது சாங்க்யா லேப்ஸ் மற்றும் ஐஐடி கான்பூரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொலைதொடர்புக்கான ஸ்பெக்ட்ரம்கள் உதவியுடன் இந்த சேவையை வழங்க உள்ளது. இதற்கிடையே தான் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என செல்போன் நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால் இந்த திட்டத்துக்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
[ad_2]
Source link