இமயம் தொடும் இண்டிகோ ..! அப்படி என்ன பண்ணாங்க?

இமயம் தொடும் இண்டிகோ ..! அப்படி என்ன பண்ணாங்க?

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களில் இன்டிகோ (Indigo)-வும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே தன்னுடைய விமான போக்குவரத்துச் சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த நிறுவனத்தின் வசம் 350க்கும் அதிகமான விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

அது நாள் ஒன்றிற்கு 2 ஆயிரத்திற்கும் அதிமான விமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இன்டிகோ நிறுவனம் மிகப் பெரிய ஓர்டரை புதிய விமானங்களுக்காக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அகலமான உடல் அமைப்பைக் கொண்ட ஏர்பஸ் ஏ350-900 (AirBus A350-900) வகை விமானங்களுக்கே அது ஓர்டர் கொடுத்திருக்கின்றது.

Advertisements

இமயம், indigo, order, airbus30 விமானங்களுக்கான ஓர்டரையே அது வழங்கி இருக்கின்றது. இந்த விமானங்கள் நிறுவனத்தின் புதிய சேவைக்காக வாங்கப்பட்டவை ஆகும். அதாவது, நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் தன்னுடை சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் அது தற்போது சர்வதேச நாடுகளுக்கும் விமான போக்குவரத்துச் சேவையைத் தொடங்க இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போது 30 புதிய விமானங்களுக்கான ஓர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த புதிய விமானங்களைக் கொண்ட இந்தியாவின் பெரும் நகரங்களுடன் உலக நாடுகளை இணைக்க இருப்பதாக இன்டிகோ தற்போது தெரிவித்து இருக்கின்றது. இதன் வாயிலாக இறக்கை உலகெங்கிலும் பரவ இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இன்டிகோவின் சர்வதேச நாடுகளுக்கான விமான சேவை திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் வரவேற்பை வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக, விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுவனமும் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கின்றது. மேலும், இன்டிகோ விமான சேவை பயன்பாட்டாளர்களும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து இருக்கின்றனர்.

நிறுவனம் ஆர்டர் கொடுத்திருக்கும் ஏ350-900 விமானங்களில் ரோல்ஸ் ராய்ஸ்-இன் டிரெண்ட் எக்ஸ்டபிள்யூபி (Rolls Royce Trent XWB) வகை எஞ்சினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. எனவே இன்டிகோ தற்போது ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சினுக்காக அந்த நிறுவனத்துடனும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் எஞ்சின் பராமரிப்பு மற்றும் பிற சேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் வழங்க இருக்கின்றது. எரிபொருள் சிக்கனத்திற்கு பெயர்போன ஓர் விமான எஞ்சினே ரோல்ஸ் ராய்ஸ்-இன் டிரெண்ட் எக்ஸ்டபிள்யூபி ஆகும். அதேவேளையில், அதிக திறனையும் அது வெளியேற்றும். மேலும், இந்த எஞ்சின் நிலையான விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel)-லும் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த எஞ்சின் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இன்டிகோ தான் வாங்க இருக்கும் புதிய விமானங்களில் இந்த எஞ்சினைப் பயன்படுத்த முன் வந்திருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே சுமார் 500 ஏர் பஸ் விமானங்களுக்கு ஆர்டரை கடந்த ஜூன் மாதத்தில்தான் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் ஓர் மிகப் பெரிய ஆர்டரை அது வழங்கி இருக்கின்றது. எனவே விரைவில் விமான போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய ஆதிக்கத்தை இன்டிகோ நிறுவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வழங்கப்பட்டு இருக்கும் ஆர்டருக்கான டெலிவரி பணிகள் 2027ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

219 அடி நீளம், 55 அடி உயரம் கொண்டதே ஏ350-900 வகை விமானம் ஆகும். இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 440 பேர் வரை பயணித்துக் கொள்ள முடியும். 283 டன் எடை வரை இதனால் ஏற்றிக் கொண்டு டேக்-ஆஃப் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே வான்வழிப் போக்குவரத்திற்கான மிக சிறந்த விமானமாக ஏர்பஸ் ஏ350-900 விமானம் பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இந்தியாவின் விமான போக்குவரத்து சேவையில் மிகப் பெரிய மற்றும் முன்னணி நிறுவனங்களில் இன்டிகோ விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது தன்னுடைய சேவையை விரிவுப்படுத்தும் பணியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது. எனவே, விரைவில் உலகின் தலைசிறந்த விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக இன்டிகோ உருவெடுக்கும் என நம்பப்படுகின்றது.

 

 

 

 

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button