சீனாவுக்கு சீக்கிரட் வேலை..! தந்தை,மகனுக்கு சிறை…
சீனாவுக்கு சீக்கிரட் வேலை..! தந்தை,மகனுக்கு சிறை...
சீனாவுக்கு உளவு வேலை பார்த்ததாக தந்தை, மகனுக்கு தைவான் அரசு 8 ஆண்டுகள் சிறந்த தண்டனை விதித்துள்ளது.
சீனாவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு தந்தை மற்றும் மகன், சீன உளவுத்துறை சார்பாக உளவு பார்த்ததற்காக, தைவானில் நீதிமன்றம் இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தைவானின் கிளை நீதிமன்றம் மற்றும் தைவானின் மத்திய செய்தி நிறுவனம் ஆகியவற்றின்படி, விசாரணையின்போது இருவரும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் இருவரையும் 2015ஆம் ஆண்டில், சீன உளவுத்துறை அதிகாரி ஒருவர் சியாமெனில் அணுகி, தைவானில் உளவு வலையமைப்பை நிறுவ உதவி கோரியுள்ளார் என அரசுத் தரப்பு வழக்கு குற்றம்சாட்டியது.
இந்த வலையமைப்பின் நோக்கமானது, தைவான் நாட்டின் இராணுவ அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவதோடு அதன்மூலம் இராணுவ ரகசிய தகவல்களை பெறுவது ஆகும்.
இந்த வேலைக்காக தந்தை, மகன் இருவருக்கும் நிதி சார்ந்த ஊக்க தொகைகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
இருவரும் விமான படை அதிகாரிகளான யே, சூ ஆகியோரை சந்தித்து, அவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுள்ளனர். சீன அதிகாரிகளிடம் இருந்து இருவரும் இந்திய மதிப்பில் மொத்தம் 43.71 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
அதேபோல் யே மற்றும் சூ இருவரும் முறையே 5.3 லட்சம் மற்றும் 2.5 லட்சம் தொகையை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு அதிகாரிகளுக்கும் கையூட்டு பெற்று குற்றத்திற்காக 7 மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.