மயிரிழையில் தப்பிய உயிர்கள்..! விமானிக்கு தூக்க கலக்கமா?

மயிரிழையில் தப்பிய உயிர்கள்..! விமானிக்கு தூக்க கலக்கமா?

மயிரிழையில் உயிர்கள் காக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தொடர்பாக இந்த பதிவை தருகிறோம்.

அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், ஒரே நேரத்தில் நான்கு விமானங்கள் புறப்படுவதைக் கண்ட சுவிஸ் விமானிகள் உடனடியாக தங்கள் விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மயிரிழையில், planes, headed, runway

ஒரே நேரத்தில் புறப்பட்ட நான்கு விமானங்கள்

கடந்த வாரம், அதாவது, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று, அமெரிக்காவிலுள்ள பிரபல விமான நிலையமான JFK சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுவிஸ் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று சூரிச் விமான நிலையத்துக்கு புறப்படத் தயாராகியுள்ளது.

மயிரிழையில், planes, headed, runway

விமானக் கட்டுப்பாட்டு மையம், விமானம் புறப்பட அனுமதியளித்ததும், விமானம் ஓடுபாதை நோக்கிச் செல்ல, வேறு மூன்று விமானங்களும் அதே ஓடுபாதையை நோக்கி வருவதை சுவிஸ் விமானத்தின் விமானிகள் கவனித்துள்ளனர்.

மயிரிழையில், planes, headed, runway

உடனடியாக அது குறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த சுவிஸ் விமானிகள், தாங்கள் புறப்படப்போவதில்லை என்பதை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து நான்கு விமானங்கள் மோதிக்கொள்ளும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

எதனால் இந்த தவறு நேர்ந்தது என்பது தொடர்பாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சமயோகிதமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த சுவிஸ் விமானிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button