முகத்தில் கருவளையமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!
முகத்தில் கருவளையமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!
முகத்தில் கருவளையம் ஏற்படுவதென்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.
முன்பு வயதானோர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்திக்கின்றனர். அதிக நேரம் லெப்டொப் , மொபைல் போன்றவற்றை பயன்படுத்துதல், வேலைப்பளு காரணமாக தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கண்களில் கருவளையங்கள் ஏற்படுகின்றன.
அதுமாத்திரமன்றி,வேறு பல பிரச்சனைகளாலும் கருவளையம் ஏற்படுகிறது.உளவியல் மன அழுத்தம், ஹோர்மோன் பிரச்சனைகள், ஒவ்வாமை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் கண்களுக்குக் கீழே கருவளையத்தை ஏற்படுத்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தூக்கமின்மை
கண்களுக்குக் கீழே முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகத்தை சேதப்படுத்தும். இவை மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. இவற்றைப் போக்க,தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை விரல்களால் கண்களுக்குக் கீழே மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் பலன் கிடைக்கும். தக்காளி சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்ய வேண்டும். இருபது நிமிடம் கழித்து கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன்களை காணலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை மசித்து அல்லது துண்டுகளாக நறுக்கி கண்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை எளிதில் குறைக்கலாம்.
பால்
பாலில் உள்ள லக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்குகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மொய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு பாலை கொட்டன் பஞ்சு ஒன்றில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். மேலும், 15 நிமிடங்கள் கழித்து இவற்றைக் குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் டி, ஏ, ஈ போன்றவை உள்ளன. இவை சரும பராமரிப்பிலும், முடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயுடன் பால் அல்லது ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் தடவலாம். 10 நிமிடங்கள் கழித்து இவற்றைத் தண்ணீரைக் கொண்டு கழுவ கருவளையம் நீங்கி விடும்.
ரோஸ் வோட்டர்
சரும பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் ரோஸ்வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம். காட்டன் துணியைப் பயன்படுத்தி, ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 15 – 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனைத் தினமும் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் எளிதாக நீங்கி விடும்.
வெள்ளரி சாறு
வெள்ளரிக்காய் சாற்றில் அன்டி ஒக்ஸிடன்டுகள், விட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. வெள்ளரிக்காயை சிறிதளவு துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவி விடலாம்.