இஸ்ரேலின் இரக்கமற்ற செயல்..! நடந்தது என்ன?

இஸ்ரேலின் இரக்கமற்ற செயல்..! நடந்தது என்ன?

இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்கள் பலஸ்தீன்மீது நாளுக்குநாள் மிலேச்சத்தனமானதாகவே செல்கின்றன.

இஸ்ரேலின், attack, bank, palestinians

இஸ்ரேலின் இராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலில் பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 பேர் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனைத் தெரிவித்துள்ளது. ஆனால் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இதற்கிடையில், உயிரிழந்த 14 தியாகிகள் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அதற்கு முன்னர் இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஃபாவின் புறநகர் பகுதியான டெல் சுல்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின், attack, bank, palestinians

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த காஸா மக்களில் பாதி பேர் எகிப்துக்கு அருகில் உள்ள ரஃபாவில் பதுங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதி முதல் காசாவில் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,049 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 76,901 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button