தலைமுடி கருப்பு.. ஆனால் இமைமுடி நரையா? அவதானமாக இருங்கள்:

தலைமுடி கருப்பு.. ஆனால் இமைமுடி நரையா? அவதானமாக இருங்கள்:

தலைமுடி நரைத்தாலும் கண் இமைகளில் உள்ள முடி நரைக்காமல் தான் இருக்கும். மிகவும் வயதான பிறகு தான் இமை முடிகள் நரைக்க தொடங்கும்.

தலைமுடி, eyelash, white, மெலனினை

ஆனால் சில நேரங்களில் இந்த இமை முடி நரைக்க தொடங்கினால் அதற்கு காரணம் உடல்நல பிரச்சனையாகவும் இருக்கலாம். சில மருந்துகளால் இருக்கலாம். வேறு பக்கவிளைவுகளாலும் இருக்கலாம். இவை தோலின் கருமையை பாதிக்கும் இயற்கை நிறமியான மெலனினை உருவாக்குகிறது. சில நேரங்களில் சிகிச்சை மூலம் மீண்டும் இருண்ட கண் இமை பெறமுடியும். இமைகளில் நரைமுடிக்கு என்ன காரணம் என்பதை இப்போது அறிவோம்.

Advertisements
  • “விட்டிலிகோ” இருந்தால் இமைகளில் நரைமுடி வரலாம்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

விட்டிலிகோ  என்பது மெலனின் இழப்பால் தோலில் உண்டாகும் வெள்ளை திட்டுகளை குறிக்கும் நிலையாகும் . இதற்கு காரணம் என்ன என்பது துல்லியமாக கண்டறியப்படவில்லை. சில மரபணுக்கள் இருப்பு மற்றும் ஓட்டோ இம்யூன் கோளாறு போன்றவை ஆபத்து காரணிகளாக இருக்கலாம்.

தேசிய சுகாதார சேவை முடி வளரும் இடங்களில் விட்டிலிகோ ஏற்பட்டால் அது மெலனின் இல்லாததால் அந்த இடத்தில் முடியை வெள்ளையாக்கிவிடுவதாக கூறுகிறது.

  • ​அலோபீசியா அரேட்டா புருவ முடியை வெள்ளையாக்கும்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

அலோபீசியா அரேட்டா என்பது தன்னுடல் தாக்க நோய். இது தலைமுடியை கொத்து கொத்தாக இழக்க செய்யும். இது பெரும்பாலும் உச்சந்தலையை பாதிக்கும். சிறிய திட்டுகள் முதல் முழுமையான வழுக்கை வரை ஏற்படுத்தும்.புருவங்கள், கண் இமைகள், தாடி, மீசை போன்றவை குறித்து 2019 ஆண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. அலோபீசியா அரேட்டா உள்ளவர்களுக்கு முடி மீண்டும் வளரும் போது தற்காலிக வெள்ளை முடியை அனுபவிப்பது பொதுவானது என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.

  • ​Blepharitis என்னும் நிலையில் இமை முடி வெள்ளையாகலாம்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

கண் இமைகளில் உண்டாகும் வீக்கம் Blepharitis என்று அழைக்கப்படுகிறது. பூச்சிகள் அல்லது பேன்கள், தொற்று மருந்துகள், எண்ணெய் சுரப்பி செயலிழப்பு போன்றவை இந்த Blepharitis ப்ளேஃபாரிடிஸை உண்டாக்கும். சிலருக்கு கண் இமைகள் வெண்மையாக மாறும். இவை தவிர இது அரிப்பு, வீக்கம், வீங்கிய கண் இமைகள், எரியும் கண்கள், எண்ணெய் கண் இமை, மிருதுவான கண் இமை, நீர் அல்லது சிவப்பு நிற கண்கள், கண்களில் ஏதோ இருப்பது போன்ற உணர்வையும் விட்டு செல்லலாம்.

  • ​மரபியல் மற்றும் ஹார்மோன்கள் கூட இமை முடி நரையை உண்டு செய்யும்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

சில நேரங்களில் மரபணு மாற்றங்கள் ஹார்மோன் காரணமாக முடி விசித்திரமாக உருவாகலாம். சில முடிகள் இளம் வயதினரிடையே காரணமின்றி நரைக்கலாம். இவர்களுக்கு மருத்துவ காரணங்கள் இருக்காது. ஆனால் மரபியல் காரணத்தால் இமை முடி நரைத்திருக்கலாம்.

  • ​மன அழுத்தத்துடன் இருப்பது இமை முடி நரையை உண்டு செய்யும்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

நேஷனல் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் ஹெல்த் டிரஸ்டெட் சோர்ஸ் ஆனது மன அழுத்தம் முடியின் வேர்க்கால்களில் இருக்கும் ஸ்டெம் செல்களில் மாற்றம் ஏற்படுத்தும் போது முடி நரைக்க்கும். இது தலைமுடி போன்று இமைமுடிகளையும் வெள்ளையாக்கும். இந்த மனஅழுத்தம் நரைமுடி இரண்டுக்குமான தொடர்பு இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • ​கண் இமை முடி வெள்ளையாக தைரொய்டு காரணம்

தலைமுடி, eyelash, white, மெலனினை

தைரொய்டு கோளாறு மெலனின் உற்பத்தியை பாதிக்கும் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் முன்கூட்டியே வெள்ளை முடியை ஏற்படுத்தும். போலியோசிஸ் என்பது கண் இமைகள் அல்லது உடலின் பிற பகுதிகளில் வெள்ளை அல்லது நரைமுடியின் ஒரு பகுடிஹ். இது எந்த வயதிலும் திடீரென்று தோன்றலாம். இது தீங்கு உண்டாக்காது என்றாலும் தைராய்டு கோளாறுகள் மற்றும் வைட்டமின் பி12 மருத்துவ குறைபாடு போன்ற நிலையில் இது தூண்டப்படலாம்.

  • ​கண் இமை முடி வெள்ளையாக விட்டமின் பி12 காரணம்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

விட்டமின் பி12 குறைபாடு முன்கூட்டியே வெள்ளை முடியை உண்டு செய்யலாம். விட்டமின்  பி12 குறைபாடின் அறிகுறியாக முடி நரைத்தலை இணைக்கலாம். இது தீங்கு விளைவிக்க கூடிய ஒன்று. இரத்த சோகை வரை உண்டு பண்ணலாம் . இந்நிலையில் உண்வில் இருந்து விட்டமின் பி12 உறிஞ்ச முடியாது.

  • ​இமை முடி நரைக்க அரிதான மருத்துவ காரணங்கள்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

Neurofibromatosis நியூரோஃபைப்ரோமோடோசிஸ் என்பது மரபுவழி நோய்களின் குழு. இது எலும்புகளில் அசாதாரண வளர்ச்சியை உண்டு செய்யும். தோல் மற்றும் நரம்பு கட்டிகள் மற்றும் நிறமி மாற்றங்களை தூண்டக்கூடியது.

Vogt-Koyanagi-Harada – இது அரிய கோளாறு தலைவலியுடன் தொடங்கும். பிறகு விட்டிலிகோ மற்றும் முடி மற்றும் கண் இமைகள் வெண்மையாக்கும். மேலும் பார்வை மற்றும் செவிப்புலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Waardenburg syndrome என்னும் இது நான்கு நிலைகளின் குழு. தலைமுடி, தோல், கண்கள், கருவிழி மற்றும் காதுகேளாமை போன்ற பகுதிகள் அல்பினிசம் அறிகுறிகளில் வரையறுக்கப்பட்டவை. இது பிறவி குறைபாடாகும் .

  • ​புகைப்பழக்கம் இமைமுடியினை நரைக்க செய்யும்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆராய்ச்சி முடிவில், புகைப்பிடித்தல் மற்றும் முன்கூட்டிய நரைத்தல் ஆகியவற்றுக்கு இடையே வலுவான தொடர்பை கண்டறிந்துள்ளது. புகைப்பதால் மெலனின் கொண்ட மயிர்க்கால்களில் அதிக ஒக்ஸிஜனேற்ற சேதம் ஏற்பட்டு அது நிறத்தை பாதிக்க செய்கிறது என்று கருதப்படுகிறது.

  • ​கண் இமை முடி நரைக்க வயது காரணம்​

தலைமுடி, eyelash, white, மெலனினை

இது பொதுவானது. வயதான பிறகு முதுமை காலத்தில் கண் இமைகள் வெள்ளையாக மாறுவது மாற்ற முடியாதது. வயதாகும் போது உங்கள் தலைமுடி மெலனின் இழக்க செய்கிறது. இதனால் தலைமுடி நரைத்து அவை குறையும் போது வெள்ளை நிறமாக மாறும்.

2018 ஆம் ஆண்டின் ஆராய்ச்சி ஒன்றின் படி 50 வயதுக்குள் 50% பேருக்கு முடி நரை தொடங்கிவிடுகிறது. பலருக்கு சாம்பல் அல்லது வெள்ளை நிற புருவங்கள் மற்றும் கண் இமைகள் உருவாவதாக சொல்லப்படுகிறது. வயதான பிறகு கண் இமைகளில் நரை முடி என்பது பொதுவானது.

 

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button