குரங்குகளின் அட்டகாசம்: டெக்னாலஜியால் உயிர்தப்பிய குழந்தை…
குரங்குகளின் அட்டகாசம்: டெக்னாலஜியால் உயிர்தப்பிய குழந்தை...
குரங்குகளின் தாக்குதலில் இருந்து தன்னையும் தனது அக்கா மகளான கைக்குழந்தையும் காத்துக்கொள்ள துரிதமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் நிகிதா என்ற சிறுமி.
உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது பெண்ணின் விவேகமான செயல் நாடுமுழுவதும் பேசப்பட்டு வருகிறது.
தன்னையும் தனது அக்கா மகளான கைக்குழந்தையும் குரங்குகள் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள துரிதமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் நிகிதா என்ற சிறுமி.
ஒரு வயதான குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த நிகிதா, குரங்குகள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சமையலறையில் பாத்திரங்களைத் தூக்கி எறிந்த குரங்குகள், நிகிதாவையும் கைக்குழந்தையையும் தாக்க முயன்றுள்ளன.
செய்வதறியாது திகைத்த நிகிதா குளிர்சாதனப் பெட்டியின் மேல் இருந்த அலெக்ஸா ஸ்பீக்கரை நாய் போல குரைக்கும் படி கட்டளையிட்டுள்ளார்.
ஸ்பீக்கரில் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட குரங்குகள் நாய் இருப்பதாக பயந்து வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறின.
நிகிதாவின் செயலை பார்த்து பெருமையடைந்த உறவினர்கள், அலெக்ஸாவை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.