நீங்கள் யார்? ரத்தம் சொல்லும் சரித்திரம் இதோ:
நீங்கள் யார்? ரத்தம் சொல்லும் சரித்திரம் இதோ:
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் ரத்த வகையை வைத்தே கண்டுபிடுத்துவிட முடியும்.
உங்கள் ரத்த வகை என்ன? உங்கள் ஆளுமை அதைப் பொறுத்ததுதான். அதாவது, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் ரத்த வகையை வைத்தே கண்டுபிடுத்துவிட முடியும்.
A ரத்த வகை:
இந்த ரத்த வகை கொண்டவர்கள் பொதுவாக எல்லோருடனும் பழக விரும்புவார்கள். பலர் முன்மாதிரியாக இருக்க தகுதியானவர்களாகவும் விளங்குவார்கள். மறுபுறம், இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் அதிக மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். தன்னை விட பிறர் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். பலர் பொறுப்பானவர்கள் மற்றும் உணர்திறன் உடையவர்கள் ஆவர்.
B ரத்த வகை:
இந்த ரத்த வகை கொண்ட மக்கள் பொதுவாக நட்பானவர்கள். ஆனால், அவர்கள் ஒப்பீட்டளவில் சுயநலவாதிகளாகவும் இருக்கக் கூடும். கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பார்கள். இந்த ரத்த வகையில் உள்ள பலர் பிடிவாத தன்மையுடனும் இருக்கிறார்கள்.
AB ரத்த வகை:
இந்த வகை மக்கள் பொதுவாக அமைதியான இயல்புடையவர்கள். புத்திசாலியாக இருப்பார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். இதன் விளைவாக, அவர்கள் யாரையும் எளிதில் நம்ப விரும்பமாட்டார்கள்.
O ரத்த வகை:
இந்த ரத்த வகையில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். வாழ்க்கையில் பெரும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளனர். இந்த ரத்த வகையைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கத் தகுதியானவர்கள். பலர் மற்றவர்களை மகிழ்விக்கவும் விரும்புகின்றனர்.