வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதி; எந்த நாட்டில் இந்த ரூல்ஸ்?
வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதி; எந்த நாட்டில் இந்த ரூல்ஸ்?
வெள்ளை நிற கார்களை தவிர இந்த நாட்டில் வேறு எந்த நிறங்களிலும் கார்கள் வைத்திருக்கக் கூடாதாம்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆணையானது, அனைத்து கருப்பு வாகனங்களையும் பறிமுதல் செய்வதை வழக்கமாக்கியது.
துர்க்மெனிஸ்தானில் வெள்ளை நிறத்தைத் தவிர அனைத்து வண்ணங்களின் கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்கிறதாம்.
துர்க்மெனிஸ்தான் 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சுதந்திர நாடாக உதயமானது. 6.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட 35வது ஆசிய நாடாக இருந்தாலும், துர்க்மெனிஸ்தானில் குறைவான மக்கள்தொகையே உள்ளது.
இந்த நாட்டில் வெள்ளை நிற கார்களை தவிர வேறு எந்த நிறங்களிலும் கார்கள் வைத்திருக்கக் கூடாதாம்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆணையானது, அனைத்து கருப்பு வாகனங்களையும் பறிமுதல் செய்வதை வழக்கமாக்கியது.
இது ஏன் நடக்கிறது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றாலும், அறிக்கையின்படி, துருக்கிய ஜனாதிபதி குர்பாங்குலி பெர்டிமுகம்மேடோவ் வெள்ளை நிற கார்கள் குறித்து மூடநம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது.
இது அவருக்கு பிடித்த நிறமாக உள்ளது. கருப்பு கார்களை இறக்குமதி செய்ய தடையும் விதித்திருக்கின்றனர். வெள்ளை நிறம் அதிர்ஷ்டம் என கருதப்படுவதாக சில தகவல்கள் உள்ளன.