உங்க விரலில் இந்த அறிகுறியா? அப்பிடின்னா அவசியம் பாருங்க..!
உங்க விரலில் இந்த அறிகுறியா? அப்பிடின்னா அவசியம் பாருங்க..!
உங்க விரலில் இந்த அறிகுறியா? அப்பிடின்னா அவசியம் பாருங்க..! கெட்ட கொலஸ்ட்ரால் உலகளவில் அதிகளவானஉயிரைப் பறிக்க முதன்மையான காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாரடைப்பால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். சமீப காலமாக கூட பிரபலங்கள் பலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருப்பது தான். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் படிந்து தடைகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தில் சீரற்றதன்மையை ஏற்படுத்தும்.
கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது உடலின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் நம்மில் பலர் அந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடுகிறோம். அதுவும் கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நமது விரல்களிலேயே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா?
நிச்சயமாக, கீழே கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் இருந்தால் கைகளில் தெரியும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் அனைத்தும் எச்சரிக்கை அறிகுறிகள். உங்களிடம் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
1. அசாதாரண மஞ்சள் படிவுகள்
உங்கள் விரல் மூட்டுகள் அல்லது விரல் தசைநாண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் வித்தியாசமாக ஏதாவது தெரிகிறதா? இப்படி தெரிந்தால், அதை சாந்தோமாஸ் என்று அழைப்பர். இவை உடலில் அதிக கெட்ட கொழுப்பு இருப்பதைக் குறிக்கிறது. எனவே உங்களின் விரல்களில் இப்படியான அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரிடம் இதை தெரிவியுங்கள்.
2. விரல்களில் வலி அல்லது அசௌகரியம்
உங்களது கை விரல்களை அழுத்தும் போது வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா?அப்படியானால் உயர் கொலஸ்ட்ரால் காரணமாக இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் தடையை குறைத்து, வலியை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவ்வப்போது உங்கள் கை விரல்களை அழுத்திப் பார்த்து சோதனை செய்து பாருங்கள்.
3. சாந்தெலஸ்மா
சாந்தெலஸ்மா என்பது பெரும்பாலும் கண் இமைகளில் காணப்படும் மஞ்சள் நிற புள்ளிகள். ஆனால் இது விரல்களிலும் உருவாகலாம். எனவ உங்கள் விரல்களில் இப்படி மஞ்சள் நிற புள்ளிகளை கண்டால், அது உயர் கொலஸ்ட்ராலின எச்சரிக்கை அறிகுறி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4. நகங்களில் மாற்றங்கள்
விரல்களை மட்டுமின்றி விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். ஒருவரது விரல் நகங்களின் நிறங்களில் மாற்றத்தையோ, நகங்கள் மிகவும் தடிமனாவோ அல்லது வளர்ச்சி குறைவாகவோ கொண்டிருந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறிகள் நீங்கள் கவனித்தால், அதை உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
5. மிகுந்த குளிர்ச்சியான கைகள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் விளைவாக கைகள் மற்றும் கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் அதிகமான கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கியிருப்பதால், இப்படியான அறிகுறியை சந்திக்கலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை பொதுவானது.
ஆனால் அந்த கொலஸ்ட்ரால் கட்டுப்பாடின்றி அதிகமாக இருந்தால், அதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், அது நமது விரல்களில் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதோடு சீரான இடைவெளியில் கொலஸ்ட்ராலை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.