24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “சீன டிராகன்” புதைபடிவத்தின் மர்மங்கள்

24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "சீன டிராகன்" புதைபடிவத்தின் மர்மங்கள்

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சீன கற்பனை உலகின் பிரபலமான “டிராகன்” உருவத்தை நினைவூட்டும் ஒரு ஊர்வன விலங்கினை விஞ்ஞானிகள் உலகுக்கு அறிவித்துள்ளனர்.

24 கோடி ஆண்டுகள் பழமையான ஊர்வனம்

புவி இயற்கை வரலாற்றின் மர்மங்களை அவிழ்க்கும் பயணத்தில், விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு அதிசயத்தை உலகுக்கு அறிவித்துள்ளனர்.

Advertisements

அதாவது சுமார் 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த (Middle Triassic period) அற்புதமான ஊர்வன உயிரினம் ஒன்றை உலகிற்கு அறிவியலாளர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

புராதன “சீன டிராகன்”(Chinese dragon) போன்ற தோற்றம் கொண்டுள்ள இந்த ஊர்வன உயிரினத்திற்கு “டிராகோசெஃபலோசோரஸ் ஓரியண்டாலிஸ்” (Dinocephalosaurus orientalis) என்று பெயரிட்டுள்ளனர்.

டிராகனின் உயிர்பெற்ற எச்சங்கள்

டிராகோசெஃபலோசோரஸ் ஓரியண்டாலிஸ் புதைபடிமங்கள் சீனாவின்(China) குயிஜோ மாகாணத்தில்(Guizhou province) முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டாலும், அப்போது கிடைத்தவை முழுமையான எலும்புக்கூடுகள் அல்ல.

பின்னர், 2023 ஆம் ஆண்டில் மேலும் சில முழுமையான புதைபடிவங்கள் கிடைத்த பிறகு, இப்போதுதான் இந்த உயிரினத்தின் முழுத் தோற்றத்தை விஞ்ஞானிகள் மீட்டமைத்துள்ளனர்.

32 முதுகுத் தண்டுகள் கொண்ட நீண்ட கழுத்து, துடுப்பு போன்ற கால்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஆழமற்ற கடல் பகுதிகளில் இரை தேடியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button