ஆடுகளால் இதெல்லாம் கூட செய்ய முடியுமா? – ஆய்வில் கிடைத்த புதிய தகவல்!
ஆடுகளால் இதெல்லாம் கூட செய்ய முடியுமா? - ஆய்வில் கிடைத்த புதிய தகவல்!
ஆடுகளால் இதெல்லாம் கூட செய்ய முடியுமா? – ஆய்வில் கிடைத்த புதிய தகவல்! பெரும்பாலும் வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் வீட்டு விலங்குகள் தான் ஆடுகள். மனித நாகரீகத்தில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமான ஒன்று அதிலும் குறிப்பாக ஆடு வளர்ப்பு!
உலகில் பலவகையான ஆடுகள் இருக்கின்றன. பால், இறைச்சி, தோல், முடி என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியாக பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுடன் நெருக்கமான உறவை பேனி வருகிறது ஆடுகள்.
இதன் விளைவாக ஆடுகள் நம் குரலின் வழியே நம் மனநிலையை அறிந்துகொள்ளும் திறனைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆடுகள் எமோஷனல் இன்டெலிஜன்டானவை (உணர்வுசார் நுண்ணறிவு). 27 ஆண்/பெண் ஆடுகள் (பல்வேறு இனங்களைச் சேர்ந்தவை) இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
‘hey, look over here’ என்ற வார்த்தையை மகிழ்ச்சியாகவும் கோபமாகவும் ஆடுகளிடம் கூறி அவற்றின் ரியாக்ஷனை பதிவு செய்து ஆராய்ந்துள்ளனர்.
மனித குரலின் தொனியை ஆடுகளால் புரிந்துகொள்ள முடிந்தது ஆச்சரியமளித்துள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் மூலம் நாய்கள் மற்றும் குதிரைகள் மனித உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும் என ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் மனித குரல்களுக்கும் உணர்வுகளுக்கும் எப்படி எதிர்வினை புரிகின்றன என்பதை அறிய இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர்.