“வீடு வாங்கினால்.. மனைவி இலவசம்..” : பின்னணி என்ன.?
"வீடு வாங்கினால்.. மனைவி இலவசம்.." : பின்னணி என்ன.?
“வீடு வாங்கினால்.. மனைவி இலவசம்..” : பின்னணி என்ன ? ரியல் எஸ்டேட் துறை இப்போது டல் அடிக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்க கூட சில வாரங்களுக்கு முன் இதை ஒப்புக்கொண்டு இருந்தார்.
ரியல் எஸ்டேட்: சீனாவின் வளர்ச்சிக்கு இத்தனை காலமாக ரியல் எஸ்டேட் துறை தான் முக்கிய காரணமாக இருந்தது. இப்போது ரியல் துறையிலும் சுணக்கம் இருக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க ரியல் எஸ்டேட் துறையினர் பல வினோதமான முறைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அப்படி சீன ரியல் எஸ்டேட் துறையினர் வெளியிட்ட விளம்பரம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சீனாவின் பொருளாதாரம் கடந்த 2023இல் 5.2% வளர்ச்சியடைந்தது.
இது கணித்ததை விடச் சற்று அதிகமாக என்றாலும் கூட வல்லுநர்கள் பலரும் இது மிக மிக சுமாரான வளர்ச்சி என்றே கூறுகின்றனர். பெருகிவரும் சீன அரசின் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் சீன பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் பங்குச் சந்தைகள் சரிந்துள்ளதும் அதையே தான் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை இது சிதறி காலி செய்வதாக இருக்கிறது.
தயக்கம்: சீனா பொருளாதாரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே அவர்கள் பிற முதலீடுகளைச் செய்யத் தயக்கம் காட்டுகிறார்கள். நீண்ட காலத்திற்கு இந்த நிலை தொடர்ந்தால் அது சீன பொருளாதாரத்தைக் கூட அழிக்கும் அபாயம் இருக்கிறது.
இதற்கிடையே ரியல் எஸ்டேட் விற்பனையை பூஸ் செய்ய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் செய்துள்ள வினோதமான யுக்தி தான் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சர்ச்சை: சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் “வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது.
இது மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்ல உதவும் என்றும் இது வீடுகளின் விற்பனையை பூஸ்ட் செய்யும் என்றும் அந்த நிறுவனம் நினைத்து இருந்தது. அதற்கேற்ப இந்த விளம்பரம் சீனாவில் டிரெண்டானது.
ஆனால், மக்களின் ரியாக்ஷன் என்பது நேர் எதிராகவே இருந்துள்ளது. பொதுமக்கள் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இந்த விளம்பரத்தை மிகக் கடுமையாகச் சாடினர்.
பெண்களை எதோ பரிசு பொருட்களைப் போலக் காட்டும் இந்த விளம்பரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இது மிகப் பெரிய சர்ச்சையாகவே அந்நாட்டின் ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியது.
விளக்கம்: அப்போது அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தைப் பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளனர். ஒரு வீட்டை வாங்கி, அதை உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்பதே தங்கள் விளம்பரம் என்றும் அதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கமளித்தனர்.
இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் அபராதம் விதித்த சீன கண்காணிப்பு அமைப்பு விளம்பரத்தை உடனடியாக நிறுத்தவும் அறிவுறுத்தியது.