8-வது திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் 112 வயது மூதாட்டி
112 வயதில் இருக்கும் சிதி ஹவா ஹுசின் என்ற மூதாட்டி தனது மறுமணத்திற்கு மணமகன் தேவை என்று கூறுகிறார்.
8-வது திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் 112 வயது மூதாட்டி மலாய்,பொதுவாக வெளிநாடுகளில் நாம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சம்பவங்கள் அரங்கேறும். இப்படியெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமா என நம்மை கேள்வி கேட்க வைக்கும்.
அப்படியொரு வினோதமான சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. 30 கொள்ளு பேரக் குழந்தைகளுடன் 112 வயதில் இருக்கும் சிதி ஹவா ஹுசின் என்ற மூதாட்டி தனது மறுமணத்திற்கு மணமகன் தேவை என்று கூறுகிறார்.
இப்போதெல்லாம் நமக்கு 40 வயதை எட்டிவிட்டாலே முதுகு வலி, மூட்டு வலி வந்துவிடுகிறது. வயதாக வயதாகப் பல பிரச்சினைகள் நமது உடலில் தலைவிரித்து ஆடுகின்றன. ஆனால் இங்கே 112 வயது மூதாட்டி சிதி ஹவா என்பவர் மறுமணத்திற்கு ஆள் தேடுகிறார்.
இதுவரை இவர் ஏழு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகளும் உள்ளன. இருந்த போதிலும் இப்போதும் அவர் 8-வது திருமணத்திற்கு ரெடியாக உள்ளதாக தெரிவிக்கிறார்.
இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், \”எனது முன்னாள் கணவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன்.
எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை என்றார். அவரது வேலைகளை அவரே செய்து கொள்கிறார். வயது முதிர்ந்த போதிலும், சிதி ஹவா இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறாராம்.
இவருக்கு மொத்தம் 19 பேரக்குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் இப்போது தனது இளைய மகன் அலி செமே (58) என்பவருடன் வசித்து வருகிறார். மலேசியாவில்தான் இந்த மூதாட்டி வசித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் கூட மணமகன்தான் கிடைக்கவில்லை என வேதனையில் தவித்து வருகிறார். மேலும், வயது முதிர்வால் இவருக்கு மறதி சற்று அதிகரித்துவிட்டது.
இருந்த போதிலும், இப்போதும் கூட மலேசிய வரலாற்றில் எப்போது என்ன சம்பவம் நடந்தது என்பதைத் துல்லியமாக அவர் கூறுகிறார். இவரது கதைதான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.