ஓக் மரத்துடன் தீராத காதல் : உடலுறவு வைப்பதாக பெண் பகீர்
ஓக் மரத்துடன் தீராத காதல் : உடலுறவு வைப்பதாக பெண் பகீர்
ஓக் மரத்துடன் தீராத காதல்; : உடலுறவு வைப்பதாக பெண் பகீர் வான்கூவர் நாட்டைச் சார்ந்த 45 வயது பெண்மணி ஜோன்சா செமியோனா.
இவர் தன்னை இயற்கை காதலர் என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் நிலையில், ஓக் மரத்துடன் உளவியல் ரீதியான உடலுறவு வைத்து தனது இயற்கை பிணைப்பை வெளிப்படுத்துவதாகவும் கூறி வருகிறார்.
இயற்கையின் மீதான காதல், சிற்றின்பம், கவர்ச்சி போன்றவற்றால் அவர் ஈர்க்கப்பட்டதாகவும், கொரோனாவின் போது ஏற்பட்ட லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு பின்னர் தினசரி நடைபயணத்தின் வாயிலாக அவருக்கு இயற்கையின் மீது ஏற்பட்ட காதல், தற்போது ஓக் மரத்தின் மீது அசாதாரண தொடர்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
குளிர்காலத்தின் போது ஐந்து நாட்கள் மரத்தின் வழியே நடந்து சென்ற பெண்மணி, மரத்தின் மீதான காதலை உணர்வில் கலந்து தற்போது இருவரும் நெருங்கியிருக்கும் அனுபவத்தையும் உலகுக்கு தெரிவித்து, அது சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
Eco Sexual என்று அழைக்கப்படும் குழுவினர், தங்களை இயற்கையின் காதலர்களாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். இவர்கள் மனிதர்களின் பாலுணர்வு தேவைகளை கடந்து, புதிய பரிணாம வளர்ச்சிக்கு கொள்கை சார்ந்து ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உடல் சார்ந்த தொடர்பு இல்லாமல் உளவியல் சார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்துவதாகவும், இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உடலுறவு சிற்றின்பத்தை ஆராய்வதற்கான வழி என்றும் ஈகோ செக்ஸுவல் ஆதரவாளர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.