ஆட்டின் தலை வாங்கி சமைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
mutton stall owner roughly speak in thirupattur
ஆட்டுக்கால் மற்றும் ஆட்டின் தலை வாங்கி சமைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இயங்கி வந்த இறைச்சி கடை ஒன்றில் ஆம்பூர்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலச்சந்தர் என்ற நபர் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டின் தலையை வாங்கி சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் இரண்டையும் சுத்தம் செய்து விட்டு சமைக்க சென்றுள்ளார். அப்போது அவற்றிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியான பாலச்சந்தர் உடனே அந்த இறைச்சி கடைக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்தது மட்டுமின்றி உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபமான பாலச்சந்தர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகவே அதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டிப்பாக இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.