ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த் – கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது கடல்தாண்டி கண்டம் தாண்டி வாழும் ஈழ மக்கள் மனங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர், கேப்டன் விஜயகாந்த், Vijaiyakanth, Captan, Rip

ஈழ மக்கள் மனங்களில் இடம்பிடித்த  விஜயகாந்த்

நடிகர் விஜயகாந் நடிப்பில் வெளியான பல படங்கள் ஈழமக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்திருந்ததாலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் ஈழதமிழ் மக்கள் பால் கொண்ட அன்பினால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.

ஈழத் தமிழர், கேப்டன் விஜயகாந்த், Vijaiyakanth, Captan, Rip

1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக கவர்னரிடம் மனு அளித்தார்.

1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

ஈழத் தமிழர், கேப்டன் விஜயகாந்த், Vijaiyakanth, Captan, Rip

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, “ஈழத்தமிழர்கள் அழும் போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அதன்பிறகு தான் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஈழத் தமிழர், கேப்டன் விஜயகாந்த், Vijaiyakanth, Captan, Rip

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் ரசிகர்கள் என  பலரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் அவரது உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழநாடு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button