பிரான்ஸ் பாரீஸில் தாய் மற்றும் குழந்தைகளின் 5 சடலங்கள் மீட்பு
பிரான்ஸ் பாரீஸில் தாய் மற்றும் குழந்தைகளின் 5 சடலங்கள் மீட்பு
பிரான்ஸ் பாரீஸில் தாய் மற்றும் குழந்தைகளின் 5 சடலங்கள் மீட்பு. பிரான்ஸில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இருந்து 41 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘Meaux‘ நகரிலேயே இடம்பெற்றுள்ளது.
தாய் குழந்தைகளின் உடல்கள் -தந்தை தலைமறைவு
கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 9 மணியளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன உயிரிழந்தவர்கள் ஒரு பெண் மற்றும் அவரது நான்கு சிறு குழந்தைகள் என்றும் பிரான்ஸ் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
“தப்பி ஓடிய” 33 வயது தந்தையை போலீசார் தேடி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பொலிஸாருக்குத் தெரிந்தவர் மற்றும் இந்த வழக்கில் முதன்மை சந்தேக நபர் ஆவார்.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
2ம் இணைப்பு
Meaux நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் என மொத்தம் ஐவர் நேற்று திங்கட்கிழமை மாலை வீடொன்றில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் (கொல்லப்பட்ட பிள்ளைகளின் தந்தை) தலைமறைவான நிலையில், அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seine-Saint-Denis மாவட்டத்தின் Sevran நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.